சொல் பொருள்
இறைவன்
சொல் பொருள் விளக்கம்
(1) பகவன் என்பது ‘பகு’ என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் ஆகும். பகுத்தவன் பகவன் எனப்பட்டான். தன்னுடம்பில் பாதியைப் பகுத்தவன் பகவன் ஆனான். எனவே உமையொரு பாகனாகிய சிவனே ஆதிபகவன் என்னலாம். அன்றியும் ஆதி என்பது சக்தியைக் குறிக்கும் என்றும், ஆதிக்கு – சக்திக்குத் – தன் உடம்பைப் பகுத்தவன் ஆதிபகவன் ஆவான் என்றும் கூறலாம். (வள்ளுவரைப் பற்றி. 21.)
(2) தனக்கோர் ஆதி இன்றி, எல்லா உலகும் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தானே ஆதியாய் நிற்றலால் இறைவன் ஆதி பகவன் எனப்படுகிறான். (திருக்குறள் விரிவுரை. 1)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்