சொல் பொருள்
ஆயரிற் கோட்டினத்தாயர், கோவினத்தாயர், மெல்லினத்தாயர் என மூவகையார் உண்டு
(பெ) இடையர்,
சொல் பொருள் விளக்கம்
ஆயரிற் கோட்டினத்தாயர், கோவினத்தாயர், மெல்லினத்தாயர் என மூவகையார் உண்டு. முறையே எருமை இனத்தவர், ஆன் இனத்தவர், ஆட்டினத்தவர் என்க. கோவினத்தாயரை நல்லினத்தாயர் என்பது வழக்கு. (கலி. 111. உரைவிளக்கம். இளவழ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cowherds
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும் – கலி 102/30,31 அறியாமை உடையோரே இந்த நல்ல இடையர் பெருமக்கள், நேற்று கொல்லுகின்ற காளையை அடக்கி அதன் கழுத்தில் ஏறினவர்களைக் கண்டும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்