Skip to content

ஆலவாய்

ஆலவாய் என்பதன் பொருள் நீர் சூழ்ந்த இடம்

1. சொல் பொருள்

ஆலவாய் என்பது மதுரையின் பழைய பெயர்.நீர் சூழ்ந்த இடத்திலே இருந்த படியினாலே ஆலவாய் என்று பெயர் உண்டாயிற்று. (அஞ்சிறைத் தும்பி. 124)

2. சொல் பொருள் விளக்கம்

ஆலவாய் என்பது மதுரையின் பழைய பெயர். ஆலவாயில் (மதுரையில்) கோயில் கொண்டவராகிய சிவ பெருமானுக்கு ஆலவாய் அண்ணல், ஆலவாயான் ஆலவாய் அரன் என்னும் பெயர்கள் தேவாரம் முதலிய நூல்களில் கூறப்படுகின்றன. மதுரை மாநகருக்கு ஆலவாய் என்று ஏன் பெயர் வந்தது? நீர் சூழ்ந்த இடத்திலே இருந்த படியினாலே ஆலவாய் என்று பெயர் உண்டாயிற்று. (அஞ்சிறைத் தும்பி. 124)

மொழிபெயர்ப்புகள்

3.ஆங்கிலம்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஞாலம் ஏத்தியதோர் மா தேவியும் ஆலவாய் பதி வாழ்வுமாறு எணும் – திருப்:920/13

அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்
  பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே – தேவா-சம்:1017/1,2
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
  பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/1,2
அண்ணல் ஆலவாய் நண்ணினான்-தனை – தேவா-சம்:1019/1
அம் பொன் ஆலவாய் நம்பனார் கழல் – தேவா-சம்:1020/1
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
  உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே – தேவா-சம்:1021/1,2
அருவன் ஆலவாய் மருவினான்-தனை – தேவா-சம்:1022/1
ஆரம் நாகம் ஆம் சீரன் ஆலவாய்
  தேர் அமண் செற்ற வீரன் என்பரே – தேவா-சம்:1023/1,2
அடிகள் ஆலவாய் படி கொள் சம்பந்தன் – தேவா-சம்:1024/1
ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/4
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/4
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/4
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/4
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/4
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/4
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/4
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3220/4
எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய்
  சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/1,2
ஆதியே திரு ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3301/3
தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய்
  அண்டனே அமண் கையரை வாதினில் – தேவா-சம்:3304/2,3
செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய்
  பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை – தேவா-சம்:3305/2,3
ஆலவாய் உறையும் அண்ணலே பணி – தேவா-சம்:3306/2
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய்
  மழு படை உடை மைந்தனே நல்கிடே – தேவா-சம்:3307/3,4
செந்து எனா முரலும் திரு ஆலவாய்
  மைந்தனே என்று வல் அமண் ஆசு அற – தேவா-சம்:3308/1,2
செய்யனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3339/1
சித்தனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3340/1
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்
  சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3341/1,2
சிட்டனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3342/1
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
  அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3343/1,2
அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3344/2
செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய்
  அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3345/1,2
தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய்
  ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3346/1,2
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய – தேவா-சம்:3348/1
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால் – தேவா-சம்:3349/1
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு – தேவா-சம்:3966/1
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/4
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே – தேவா-சம்:4040/4
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே – தேவா-சம்:4043/4
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/4
அங்கயற்கண்ணி-தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4090/4
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4093/4
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4099/4
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2

ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/2
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1

தேடும் கழலார் திரு ஆலவாய் சென்று தாழ்ந்து – 4.மும்மை:1 43/3
அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார்-தம்மை – 6.வம்பறா:1 647/1
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து – 6.வம்பறா:1 664/2
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த – 6.வம்பறா:1 665/1
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் – 6.வம்பறா:1 704/2
அன்னவன் வல-பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே – 6.வம்பறா:1 764/2
அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் – 6.வம்பறா:1 861/1
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்ற கண்டு – 6.வம்பறா:1 863/1
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:1 865/4
ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் – 6.வம்பறா:1 872/3
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் – 6.வம்பறா:1 876/3
வாகீச மா முனிவர் மன்னும் திரு ஆலவாய்
   நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்க – 6.வம்பறா:1 947/1,2
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த – 7.வார்கொண்ட:4 82/2
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 92/4
திரு ஆலவாய் அமர்ந்த செம் சடையார் கோயில் வலம் – 7.வார்கொண்ட:4 93/1
பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார் – 12.மன்னிய:5 1/4
ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று – 12.மன்னிய:5 2/1

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

2 thoughts on “ஆலவாய்”

    1. இப்போதுள்ள மதுரை வட ஆலவாய் என்றால்….

      தென் ஆலவாய் ஒன்று இருக்கும் அல்லவா?

      சற்றே மாற்றி யோசிப்போம்

      நமசிவாய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *