Skip to content

சொல் பொருள்

(வி.வி.மு) 1. அழவேண்டாம், 2. ஆழ்ந்து வருந்தவேண்டாம், 3. துன்பத்துள் ஆழ்ந்திடாதே / அழுந்திடாதே

2. (பெ) 1. ஆழ்தல், 2. கறையான்

சொல் பொருள் விளக்கம்

(வி.வி.மு) 1. அழவேண்டாம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

do not cry, do not grieve deeply, do not get immersed into grief, the state of being deep, white ant

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி – நற் 197/4,5

திண்ணமாக எம் உயிர் இறந்தொழிதல்பொருட்டே என்பதனை யாம் நன்றாகத் தெளிந்துகொண்டோம் என்று
அழாதேகொள், தோழீ
– பின்னத்தூரார் உரை

ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே – நற் 391/1

அழாதேகொள், அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொள்ளுமாரு செல்வதனை இன்னேஒழிகுவார்காண்.
– பின்னத்தூரார் உரை

தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி – நற் 197/4,5

அவர் நம்மை மறந்தார் என்பதைத் தெளிய உணர்ந்துகொண்டோம், தேய்ந்து கெடுக என் உயிர் என்று
வருந்தாதேகொள், வாழி, தோழி
– ஔ.சு.து.உரை

ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே – நற் 391/1

ஆழ்ந்து வருந்தற்க மடந்தையே!, அவர்செலவு மேற்கொள்ளாமல் அழுங்குவராகலான்
– ஆழல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள் – ஔ.சு.து.உரை

நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து
ஆழல் வாழி தோழி – அகம் 61/4,5

தலைவர் பிரிந்த நாளைக் குறித்து வைத்த நீண்ட சுவரினை நோக்கி, வருந்தித்
துன்பத்து ஆழ்ந்திடாதே , வாழ்க தோழி
– நாட்டார் உரை

அறவர் அல்லர் அவர் என பல புலந்து
ஆழல் வாழி தோழி – அகம் 85/4,5

அவர் அறத்தினர் அல்லர் என்று இவ்வாறு பலவும் கூறி வெறுத்துத்
துயரில் அழுந்தாதே
– நாட்டார் உரை

ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் – புறம் 152/5

ஆழ்தலையுடைய புற்றின்கண் கிடக்கின்ற உடும்பின்கண் சென்று செறியும்

ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் – புறம் 152/5

கறையான் புற்றின்கண் கிடக்கின்ற உடும்பின்கண் சென்று செறியும்
– ஆழல் – கறையான் – தமிழ்ப்பேரகராதி – Tamil Lexicon
– ஆழல் – கரையான், தாழ்தல் – கதிர்வேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *