சொல் பொருள்
(பெ) 1. சக்கரம், 2. கடல், 3. மோதிரம்
ஆழ்ந்திருப்பது ஆழி. (கடல்)
சொல் பொருள் விளக்கம்
ஆழ்ந்திருப்பது ஆழி. (கடல்) (ஒப்பியன் மொழிநூல். 157.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wheel, sea, ring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/7 கடற்கரையில், தேரின் சக்கரத்தில் படாதவாறு நண்டுகளை விலக்கி ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4 கடல் மேலே எறிந்த கருமணலாகிய சேறு ஒழுகியோடிவதால் ஏற்பட்ட அருவி கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் – பரி 7/46 கைவளைகள், மோதிரங்கள், தலை அணிகள், அணிந்துள்ள துகில்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்