சொல் பொருள்
(பெ) 1. வேள் ஆவி என்பானின் மரபினர், 2. நறுமணப்புகை ஊட்டியவர்
சொல் பொருள் விளக்கம்
1. வேள் ஆவி என்பானின் மரபினர்
பேகன் என்ற வள்ளல் இந்த குடியில் வந்தவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A family descended from Avi of Pothini mountains
those who apply fragrant fumes
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெரும் கல் நாடன் பேகனும் – சிறு 85-87 காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன், பெரிய மலை நாட்டையுடைய பேகனும் கை புனை தாரினர் கண்ணியர் ஐ எனும் ஆவியர் ஆடையர் – பரி 24/11,12 (பெண்கள்)திறம்படக் கையால் புனையப்பட்ட மாலை சூடியவராய், (ஆண்கள்)தலை மாலை சூடியவராய், (பெண்கள்)வியத்தகுவகையில் நறுமணப்புகை ஊட்டிக்கொண்டவராய், (ஆண்கள்)வியத்தகு ஆடை அணிந்தவராய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்