Skip to content
இஞ்சி

இஞ்சி என்பது ஒரு வகை உறைப்பான கிழங்கு

1. சொல் பொருள்

(பெ) 1. உறைப்பான கிழங்கு வகை, 2. கோட்டை மதில்

இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சி காய்ந்தால் சுக்கு. சுக்கு = நீர்வற்றியது.

இஞ்சி – கருமி

கடுகடுப்பான முகமும் வெடுவெடுப்பான சொல்லும் உடையவரை ‘இஞ்சி’ எனப் பட்டப் பெயரிட்டு வழங்குவது பொதுவழக்கு.

2. சொல் பொருள் விளக்கம்

இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சி காய்ந்தால் சுக்கு. சுக்கு = நீர்வற்றியது. (வடமொழி வரலாறு. 87)

வந்ததை வெளிவிடாமல் உள்வாங்கிக் கொள்ளும் கொடாக்கண்டனாம் கருமியைக் குறிப்பது செட்டி நாட்டு வழக்கு.

மணலில் நீர்விட்டால் உடனே நீர் உறிஞ்சப்பட்டு உள்ளே போய்விடும். இஞ்சி என்பது உறிஞ்சுதல் பொருளது. இது உறிஞ்சுதலைக் குறியாமல் வந்ததை வெளிவிடாமல் உள்வாங்கிக் கொள்ளும் கொடாக்கண்டனாம் கருமியைக் குறிப்பது செட்டி நாட்டு வழக்கு.

கடுகடுப்பான முகமும் வெடுவெடுப்பான சொல்லும் உடையவரை ‘இஞ்சி’ எனப் பட்டப் பெயரிட்டு வழங்குவது பொதுவழக்கு. இஞ்சியின் எரிச்சலை வெளிப்படுத்துவது இது. இஞ்சி தின்ற குரங்குபோல என்பது பழமொழி.

இஞ்சி
இஞ்சி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Zingiber officinale, ginger

ramparts of a fort

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இஞ்சி
இஞ்சி
இஞ்சி, மஞ்சள், பைங் கறி, பிறவும்,	
பல் வேறு தாரமொடு, கல்கத்து ஈண்டி – மது 289

வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92

மலையைப் போன்ற உயர்ச்சி கொண்ட விண்ணைத் தொடும் கோட்டைமதில்

இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் - மது 289

முதல் சேம்பின் முளை இஞ்சி/அகல் நகர் வியல் முற்றத்து - பட் 19,20

வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி/உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் - மலை 92,93

காயம் கொண்டன இஞ்சி மா இருந்து - மலை 126

கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி/நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் - பதி 16/1,2

இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி - பதி 42/10

மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது - பதி 58/6

புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி/அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பி - பதி 62/10,11

நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் - பதி 68/16

வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்ப - அகம் 35/2

புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி - அகம் 195/3

அரை மண் இஞ்சி நாள்கொடி நுடங்கும் - புறம் 341/5

சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர் - புறம் 350/2

மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து - புகார்:10/74

ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை - மணி:5/112

காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை - மணி:6/49

இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் - சிந்தா:1 143/1

இஞ்சி மாநகர் தன் இடம் எய்தினாள் - சிந்தா:1 358/4

செம்பு கொண்டு அன்ன இஞ்சி திருநகர் செல்வ என்றார் - சிந்தா:2 439/4

பொன்னார் இஞ்சி புகழ் வேந்தே பொறியின் வேட்கை கடல் அழுந்தி - சிந்தா:5 1243/3

உலகம் மூன்று உடையோய் நீ ஒண் பொன் இஞ்சி எயிலோய் நீ - சிந்தா:5 1244/1

மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மா முடி குரிசில் நாளை - சிந்தா:5 1296/3

ஏந்து பொன் இஞ்சி மூதூர் இராசமாபுரம் அது என்றான் - சிந்தா:7 1855/4

இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லையே - சிந்தா:8 1947/4

அளிந்த தீம் பழம் இஞ்சி ஆர்ந்த நீர் - சிந்தா:13 2682/1

இஞ்சி மாநகர் இடும் பிச்சை ஏற்றலால் - சிந்தா:13 2941/3

சூட்டு வைத்து அனையது அ சுடர் பொன் இஞ்சியே - சிந்தா:6 1445/4

இஞ்சி அடைத்துவைத்து ஏமாந்து இருப்பினும் - பழ:154/1

கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழி தோற்றம் - தேம்பா:2 8/4

கார் வளர் மின்னின் மின்னி கதிர் வளர் பசும்பொன் இஞ்சி
  வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய் - தேம்பா:4 46/1,2

தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச - தேம்பா:24 1/2

பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ - தேம்பா:29 20/1

இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ் - தேம்பா:29 26/2

கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே - தேவா-சம்:1093/4

மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் - தேவா-சம்:1110/1

கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை - தேவா-சம்:1270/1

முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் - தேவா-சம்:1362/3

செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் - தேவா-
சம்:1366/1

வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி
  வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை - தேவா-சம்:2262/1,2

மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி
  சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை - தேவா-சம்:2268/2,3

தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி
  எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் - தேவா-சம்:2271/1,2

இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ - தேவா-அப்:1303/3

எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி
  செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:425/1,2

இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் - தேவா-சம்:4088/3

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி - தேவா-சம்:3784/3

இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர் - திருக்கோ:167/3

தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் - 1.திருமலை:5 95/4

திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ - 4.மும்மை:5 86/3

இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில் - 6.வம்பறா:2 2/1

மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் - 13.வெள்ளானை:1 22/4

வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ - நாலாயி:790/3

தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி
  திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே - திருப்:26/15,16

தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி
  திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே - திருப்:67/15,16

சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் - திருப்:151/15

சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று உலாவிய பெருமாளே - திருப்:202/8

இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே - திருப்:807/16

இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே - திருப்:972/16

சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை - திருப்:1310/5

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல - திருப்:27/15

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல - திருப்:40/15

வித்தையின் இயற்று பொறி மேவி உயர் இஞ்சி
  முத்திகைப்படுத்தினர் முகம்மது அவண் அன்றே - சீறா:4132/3,4

வானநாயக இஞ்சி யாம் வகுத்திட மாட்டேம் - சீறா:4400/3

இஞ்சியின் இருந்த பொருள் எள்துணையும் இன்றி - சீறா:4138/1

மென் குடர் வெள்ளை குதட்டிரே மெல் விரல் இஞ்சி அதுக்கீரே - கலிங்:578/1

வான் தோய் இஞ்சி வள நகர் வரைப்பின் - உஞ்ஞை:54/5

இஞ்சி ஓங்கிய இராசகிரியத்து - வத்தவ:4/46

நீண்ட இஞ்சியும் நிறை மணி மாடமும் - உஞ்ஞை:40/279

பாவை இஞ்சியும் கூவை சுண்ணமும் - உஞ்ஞை:51/23

கரும்பும் இஞ்சியும் ஒருங்கு உடன் நிரைத்து - இலாவாண:1/4

மஞ்சளும் இஞ்சியும் செம் சிறு கடுகும் - மகத:17/142

இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே - பால:3 9/4

சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி
  குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன - பால:3 70/2,3

இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சி சூழ் மிதிலை - பால:9 13/1

இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான் - பால:20 30/4

ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி
  பேடை நல் அணி முனிந்தன மென் நடை புறவம் - அயோ:4 209/3,4

ஆதலின் இ பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி
  மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் - கிட்:17 6/1,2

பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே - சுந்:2 80/3

தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி
  மேயது கடந்தனன் வினை பகையை வென்றான் - சுந்:2 164/3,4

இஞ்சி உட்படும் இலங்கையின் சிறையில் வைத்திட ஓர் - சுந்-மிகை:3 2/3

இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி - யுத்1:2 117/2

செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி - யுத்2:16 155/1

பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர் பைம் பொன் இஞ்சி
  ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் - யுத்3:22 34/3,4

கை அகல் இஞ்சி காவல் கலங்க - யுத்3:26 23/1

என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட - சுந்:2 154/2
இஞ்சி
இஞ்சி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *