சொல் பொருள்
இனம் – உற்றார் உறவினராகிய சுற்றப்பெருக்கம்.
கனம் – வீடு நிலம் பணம் முதலாகிய பொருட்பெருக்கம்.
சொல் பொருள் விளக்கம்
“இனம் கனம் இருந்தால் மதிப்பிருக்கும்”
“மடியில் கனமில்லை; வழியில்லை பயமில்லை” என்னும் பழமொழிகளில் ‘கனம்’ பொருள் என்னும் பொருளாதல் விளங்கும். ‘கனவான்’ என்பதறிக.
“இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு” என்பதில் இன விளக்கம் இருப்பது அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்