சொல் பொருள்
(பெ) ஒரு சேர அரச மரபு
சொல் பொருள் விளக்கம்
ஒரு சேர அரச மரபு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A Chera kingdom lineage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின் நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ – பதி 89/9-11 பலவாகிய வேற்படையையுடைய இரும்பொறையே, நினது அரசியல்முறை செம்மையாக நடத்தலால் நாடோறும் நாட்டவரெல்லாம் நின்னைத் தொழுது பரவுவதாலும் உயர்ந்த நிலைமையினையுடைத்தாகிய தேவருலக வாழ்வுக்குரிய ஒழுக்கத்தால் உயர்ந்த சான்றோர் பரவி வாழ்த்துதலாலும் – இவன் இளஞ்சேரல் இறும்பொறை என்பான். நின் பாடிய அலங்கு செந்நா பிறர் இசை நுவலாமை ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேளுலகத்து – புறம் 22/31-35 நின்னைப்பாடிய விளங்கிய செவ்விய நா பிறருடைய புகழைச் சொல்லாமல் பாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எம் கோவே! மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாதுகாத்த நாடு தேவருலகத்தை ஒக்கும் – இவன் சேரமான் யானைகண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர மன்னர்களைப் பற்றியது. இதிற்கண்ட சேர மன்னர்களை உதியஞ்சேரல் , அந்துவஞ்சேரல் இரும்பொறை என்ற இரண்டு மரபினராகப் பிரிப்பர் வரலாற்று உரையாசிரியர் ஔவை.சு.துரைசாமி அவர்கள். சங்க கால அரசர்களில் இரும்பொறை என்னும் பெயருடன் 7 அரசர்கள் காணப்படுகின்றனர். 1. பெருஞ்சேரல் இரும்பொறை – பதிற்றுப்பத்தில் 8-ஆம் பத்துத் தலைவன் – இவனைப் பாடிய புலவர் அரிசில் கிழார 2. இளஞ்சேரல் இரும்பொறை – பதிற்றுப்பத்தில் 9-ஆம் பத்துத் தலைவன் – இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார் 3. குட்டுவன் இரும்பொறை – 9-ஆம் பத்துத் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை – இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார் 4. அந்துவஞ்சேரல் இரும்பொறை – இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் 5. கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை – இவனைப் பாடிய புலவர் நரி வெரூஉத் தலையார் 6. குடக்கோச் சேரல் இரும்பொறை – இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார் 7. சேரமான் யானைகண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை – இவனைப் பாடிய புலவர் குறுங்கோழியூர் கிழார் & கூடலூர் கிழார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்