சொல் பொருள்
(வி) அரசாள் (நிலையாய்த் தங்கு),
சொல் பொருள் விளக்கம்
அரசாள் (நிலையாய்த் தங்கு),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rule over (permanently stay)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈரும் பேனும் இருந்து இறைகூடி – பொரு 79 ஈரும் பேனும் இருந்து அரசாண்டு (நிலைகொண்டு) நன் நுதல் விருந்து இறைகூடிய பசலைக்கு மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/7-9 நல்ல நெற்றியில் புதிதாய் வந்து அரசாளும் (நிலையாய்க் குடியிருக்கும்) பசலைக்கு மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக! – நன் நுதல் இருந்து இறைகூடி என்று கொள்வார் பின்னத்தூரார். நல்ல நெற்றியிலிருந்து நிலைமிகுதலைக் கொண்ட பசலை நோய்க்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்