Skip to content

ஈடுசோடு

சொல் பொருள்

ஈடு – உயர்வு என்னும் பொருளதாதலும் அதன் விளக்கமும் ஈடு இணை என்பதில் காண்க.
சோடு – சுவடு; சுவடாவது ஒப்பு

சொல் பொருள் விளக்கம்

சுவடிப் பிள்ளைகள், சுவடிக் காளைகள், சுவடிப்பு என்பவற்றில் ஒப்புப் பொருள் உண்மை அறிக. சோடு – சோடி என்றாயிற்று. ஒரு முறியை எடுத்து,அதற்கு ஒப்பாக இன்னொரு முறியை எடுத்து இணை சேர்ப்பதையே ‘சுவடி சேர்ப்பது’ என்பதையும், அதுவே சுவடியாயிற்று என்பதையும் கருதுக. இணைக்கால்களும் தடமும் சுவடு எனப்படுவதையும் கொள்க.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *