Skip to content

ஈவுதாவு

சொல் பொருள்

ஈவு – கொடை என்னும் பொருள்தருதல்; ஈவிரக்கம் என்பதில் கண்டதே.
தாவு – என்பது பணிவு என்னும் பொருளது; தாழ்வு என்பது தாவு ஆயிற்று. வீழ்வு என்பது வீவு ஆவது போல.

சொல் பொருள் விளக்கம்

மலையடிப் பள்ளத் தாக்குகளையோ’ பிற பள்ளங்களையோ தாவு என்பது வழக்கு. ‘மேடு தாவு’என முரண் தொடையாகவும் வழங்கும். தாவ – தணிவு; இங்கு தணிவு என்பது ஒருவர் நிலைக்குத் தணிந்து சென்று அவர்க்குப் பணிவுடன் உதவுதலைக் குறித்து வந்தது. ஈவார்க்குத் தாவும் வேண்டும் என்பதை ‘எவ்வம் உரையாமை ஈதல்’ என்பார் வள்ளுவர்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *