சொல் பொருள்
(வி) 1. காலால் உந்திச் செலுத்து, 2. காலால் மிதித்து உழக்கு, 3. காலால் மிதித்து எழுப்பு, 4. உந்திச் செலுத்து,
சொல் பொருள் விளக்கம்
1. காலால் உந்திச் செலுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
drive with force on legs, trample down, stir up, discharge
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும் – ஐங் 192/2 ஓசை முழங்கும் குளிர்ந்த துறையில் ஓடுகின்ற கலங்களை தரையில் உதைத்துச் செலுத்தும் கயல் ஆர் நாரை உகைத்த வாளை – புறம் 354/5 கயல்மீனை உண்ணும் நாரை காலால் மிதித்து உழக்கிய வாளை மீன் பல புரவி நீறு உகைப்ப – மது 184 பல குதிரைகள் துகள்களை எழுப்ப விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த,கணை – புறம் 369/8 விசைத்துக் கட்டப்பட்ட வலிய வில்லினுடைய பெரிய நாண் உந்திச் செலுத்திய, அம்பு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்