Skip to content

சொல் பொருள்

(வி) 1. உதிர், 2. சிந்து, சிதறு, 3. கரைந்து தேய்தல், 4. கெடு,

சொல் பொருள் விளக்கம்

1. உதிர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

shed asleaves from a tree, be strewed, scattered, spilled, to melt, pine, languish, wither;, wear off, pass away; to be lost;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – குறு 8/1

வயலோர மாமரத்தில் நன்கு கனிந்து உதிர்ந்த இனிய பழம்

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2

நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் கொட்டியதைப் போல

உப்பு இயல் பாவை உறை உற்றது போல்
உக்குவிடும் என் உயிர் – கலி 138/17.

உப்பினால் செய்த பாவையின் மேல் மழைத்துளி விழுந்தது போல்
கரைந்துவிடும் என் உயிர்

உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – அகம் 67/14

தழைகளைக்கொண்டு மூடிய கற்குவியல்களில் மரித்த ஆட்களின் உடல் கெட்டுக்கிடக்கும் பாழிடம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *