Skip to content

சொல் பொருள்

(வி) 1. விடாது முயற்சிசெய், 2. செய்துமுடி,

சொல் பொருள் விளக்கம்

1. விடாது முயற்சிசெய்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

untiringly persevere

perform, accomplish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/16,17

எல்லாமே கொல்லுமாறு நின்று வருத்த, விடாது முயன்று
எவ்வாறூயிருடன் இருக்கிறாய் என்கின்றாய் தோழியே!

அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் – பதி 51/8,9

நண்டுகள் ஊர்ந்துதிரிந்ததனால் ஏற்பட்ட
சுவடுகளை அழிக்கும்படியாக நுண்ணிய குறுமணலை ஊதைக் காற்று வீசியெறியும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *