Skip to content

சொல் பொருள்

(வி) அஞ்சு,

2. (பெ) அச்சம்

சொல் பொருள் விளக்கம்

1. அஞ்சு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be afraid, fear

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 243,244

முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக,
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே

நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184

நாணமும் அச்சமும் (எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால்,

உட்கு என்ற அச்சம் பற்றிய விளக்கத்தையும், அதைப் போன்ற பலவிதமான அச்சங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள
ஆசிரியர் எழுதி வெளியிட்டுள்ள சங்கச் சொல்வளம் – 4.அஞ்சுதல் என்ற கட்டுரையைப் படிக்கவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *