சொல் பொருள்
உடைப்பில் போடல் – தள்ளிவிடல்
சொல் பொருள் விளக்கம்
உடைப்பை அடைக்க மண்ணையும் கல்லையும் போடுவர். சிலர் எரிச்சலால் உதவாக் கரைப்பிள்ளைகளையும் வேலைக் காரரையும் உன்னை உடைப்பில் வைக்கலாம்; உடைப்பில் தான் போட வேண்டும் என்பர். சில வேலைகளைச் செய்யாது தவிர்த்தலைக் கிடப்பில் போடல் என்பதுடன் உடைப்பில் போடல் என்பதும் உண்டு. முன்னது பள்ளத்தில் தள்ளல். பின்னது காலத்தைத் தள்ளல். உடைப்பில் போட்டு மூடப்பட்டது வெளிப்படுமா? புதைபொருள் ஆய்வார்க்கு ஒரு காலத்துப் புலப்படலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்