Skip to content
உண்டி

உண்டி என்பது சாப்பாடு

1. சொல் பொருள்

(பெ) சாப்பாடு, உணவு, சிற்றுண்டி

2. சொல் பொருள் விளக்கம்

உண்டி எனப்படுவது உண்ணும் நிலையில் உள்ள உணவு. உண்டி என்ற சொல் உயர்திணை உயிரினங்கள் உண்ணுவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது

உணவு என்ற பொதுச்சொல் எல்லா உயிரினங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம். வானில் பறந்து திரியும் வானம்பாடிப் பறவைக்கு மழைத்துளியே உணவு என்கிறது பட்டினப்பாலை.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று

உண்டி
உண்டி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

cooked food, meal.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – புறம் 18/19

சிற்றுண்டி
உண்டி

கொண்டி உண்டி தொண்டையோர் மருக – பெரும் 454

(பகைப்புலத்துக்)கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோர் குடியிற் பிறந்தவனே,

காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 83

நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்,

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு. 156:1-4

நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!

நின் உருபுடன் உண்டி/பிறர் உடம்படுவாரா – பரி 2/65,66

முறையே, உன் உருவமும், உன் உணவும்,

பிறை வளர் நிறை மதி உண்டி/அணி மணி பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீ – பரி 3/52,53

பிறைகளாகி வளர்கின்ற நிறைத்திங்களான உணவினையும்,

வழியது பக்கத்து அமரர் உண்டி/மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க – பரி 11/35,36

அடுத்த தேய்கின்ற பக்கத்தில், தேவர்களின் உணவாகிய

உண்டி
உண்டி

நுந்தை பால் உண்டி சில – கலி 85/25

உன் தந்தைக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்!

ஞாயர் பால் உண்டி சில – கலி 85/28

உன் தாய்மாருக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்!

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – புறம் 18/19

உணவு கொடுத்தவர்கள் உயிரையும் கொடுத்தவர் ஆவர்,

உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20

உணவையே முதலாவதாக உடையது அந்த உணவால் ஆகிய உடம்பு,

உண்டி
உண்டி

கிணைமகள் அட்ட பாகல் புளிங்கூழ்
பொழுதுமறுத்துண்ணும் உண்டியேன் – புறம் 399:16,17

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *