சொல் பொருள்
உத்தியார் – ஒத்த திறமுடைய இருவர் உத்தியார்.
உரியார்- இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார்.
சொல் பொருள் விளக்கம்
சிறார் விளையாட்டில் ஆட்டத்திற்கு ஆள் எடுக்கும் போது கேட்கும் இணைச்சொல் இது.
ஒற்றைக்கு ஒற்றையை ‘உத்திக்கு உத்தி’ என்பர்; ஒத்தவன் ஒத்தியாகி ‘உத்தி’யானான். ஓத்தைக்கு ஒத்தை என்பதும் உண்டு.
“மணலைக் கயிறாகத் திரித்தவன் வேண்டுமா? வானத்தை வில்லாக வளைத்தவன் வேண்டுமா?” என்று தலைமை ஆட்டக்காரனிடம் உத்தியாக வந்தவர் கேட்பார். அவன் எவனென்று சொல்கிறானோ அவன் தங்களுக்கு முன்னே பேசி வைத்துக் கொண்ட பெயர்ப்படி உத்தியாகப் போவான்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்