Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நிமித்தம் காட்டும் ஒரு வகை மரம், 2. கருத்து

உன்னம் என்பதற்குப் படகு என்னும் பொருள் வழக்கு, திருச்செந்தில் வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

வருங்குறி காட்டும் மரமொன்று ‘உன்னம்’ என வழங்கப்படுதல் புறத்திணையில் உண்டு. உன்னம் என்பதற்குப் படகு என்னும் பொருள் வழக்கு, திருச்செந்தில் வட்டார வழக்காகும். அவர் வளக்குறி காட்டுவதாக அதனைக் கொண்டு மீனவர் வழங்கிப் பொது வழக்காகியிருக்கலாம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a kind of tree that was believed for omens, thought, intension

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புன் கால் உன்னம் சாய – பதி 40/17

புல்லிய கால்களையுடைய உன்னமரம் வாடி அழிய

உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் – அகம் 65/1

நம் கருத்தினை உணர்ந்து கொண்ட அறிவுடன் தன் உள்ளத்தை மறைத்து வாழும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *