Skip to content

சொல் பொருள்

உழத்தல் என்றால் வருந்தி வேலை செய்தல் என்பது பொருள். உழவு என்ற சொல்லினும் உழத்தல் என்ற சொல்லினும் வருந்தி வேலை செய்தல் என்ற பொருளுடைய அடிவேர் இருக்கிறது

உழவர் ஆயோரிடை ‘உழவு’ என்பது வயது என்னும் பொருளில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

உழவுத்தொழில் கடினமாயினும் மேற்கொள்ளத் தக்கது. அத்தொழிலின் கடுமை “உழவு” என்ற சொல்லாலே விளங்குகின்றது. உழத்தல் என்றால் வருந்தி வேலை செய்தல் என்பது பொருள். உழவு என்ற சொல்லினும் உழத்தல் என்ற சொல்லினும் வருந்தி வேலை செய்தல் என்ற பொருளுடைய அடிவேர் இருக்கிறது. (தமிழ் காட்டும் உலகு – உலகத்தார்க்கு ஆணி – 82.)

உழுதல் தொழிலை உழவு என்பது பொது வழக்கு. ஆனால் மாட்டுத் தரகர், உழவர் ஆயோரிடை ‘உழவு’ என்பது வயது என்னும் பொருளில் வழங்குகின்றது. உழுவதற்கு ஏற்ற வயது என்பது கொண்டு அதன் அடிப்படையில் இரண்டு உழவு, மூன்று உழவு என வயது மதிக்கப்பட்டிருக்க வேண்டும். வேந்தர்களின் ஆட்சியாண்டும், துறவோரின் ஆட்சியாண்டும் கணக்கிடப்படுவதை எண்ணலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *