சொல் பொருள்
ஊடு – ஊடு ஊடாகக் கலக்கமான இடம்.
பாடு – பயிர் பட்டுப் போன இடம்
சொல் பொருள் விளக்கம்
“ஊடும் பாடும் பயிர் நட வேண்டும்; மிகக் கலக்கமாக இருக்கிறது பயிர்” என்பது உழவர் குடியின் உரை. ஊடு ஊடாகப் பயிரில்லாத இடம் ஊடுபாடு’ ஆகவும் குறிக்கப்பட்டன. கண்ணை மூடுதல் ‘கண்பாடு’ எனப்படும். படுத்தல் என்பதும் அது. பயிர் படுத்துவிடுதல் ‘பாடு’ எனப்படுகிறதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்