சொல் பொருள்
ஊடு – ஊடை எனப்படும் குறுக்குநூல்.
பா – பாவு எனப்படும் நெடுக்குநூல்.
சொல் பொருள் விளக்கம்
ஊடும் பாவும் சீராக வாராக்கால், இழையறுந்தும் திண்டும் திரடுமாகித் தோன்றும். ஊடு என்பது ஊடை எனவும்படும். ஊடைநூல் ஓடத்தின் வழியே, பாவின் ஊடே ஊடே சென்று வருவதாம். துணி நெய்வோர் ஊடையும் பாவையும் ஒருங்கே கண்காணித்துக் கொண்டே இயக்குவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்