சொல் பொருள்
ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி என்று கூறுதலும், ஊரினரால் உண்ணப்படும் தகுதியுடைய நீர்நிலையைஊருணி என்று கூறுதலும் வழக்கென்று கொள்ளுதலும் பொருந்தும்
சொல் பொருள் விளக்கம்
ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி என்று கூறுதலும், ஊரினரால் உண்ணப்படும் தகுதியுடைய நீர்நிலையை ஊருணி என்று கூறுதலும் வழக்கென்று கொள்ளுதலும் பொருந்தும். “ஊர்க்கும் அணித்தே பொய்கை” என்னும் குறுந்தொகையையும் (113) “உற்றவர்க்குச் சேர் ஊரணி என்னும் திருக்கோவையார் (400) அடிக்கு, “சுற்றத்தார்க்கு அவர் வேண்டிய செய்ய இருத்தலின் அணித்தாய ஊரணியோடு ஒக்கும்” என்ற பேராசிரியர் உரையையும் அறிக. (குறுந். 113. உ. வே. சா.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
ஊழியம் என்றால் என்ன?
அரசு ஊழியர்கள் சரியா?