சொல் பொருள்
எடுத்துவிடல் – புனைந்து கூறுதல்
சொல் பொருள் விளக்கம்
உள்ளதை உள்ளபடி கூறாமல் இட்டுக்கட்டியும் பொய்யும் புளுகும் புனைந்தும் கூறுவது சிலர்க்கு மாறா இயற்கையாக இருப்பது உண்டு. அத்தகையவர், அவ்வாறு சொல்வதில் தமக்குள்ள தேர்ச்சியை எண்ணித் தாமே பூரிப்பதும் உண்டு. அதனைப் பாராட்டிக் கேட்பவரும் புகழ்ந்து பேசுபவரும் இருந்து விட்டால் கேட்க வேண்டியதில்லை. சுண்டைக்காயே அண்டத்தை அசைக்கும் கதையாகிவிடும், அத்தகையவன் செயலை ‘எடுத்துவிட்டான் பாருங்கல்’ என்பவரும், ‘நீ சும்மா எடுத்துவிடு’ என்பவரும் அவனைப் புகழ்பவர் போல் பழிப்பவர் என்பதை அவன் உணர்வானா?
இது ஒரு வழக்குச் சொல்
பார்க்க எடுத்துவிடல், கயிறு திரித்தல், பொய் புளுகு, கயிறு உருட்டல், கதைவிடல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்