Skip to content

பொய் புளுகு

சொல் பொருள்

பொய் – உண்மை அல்லது உள்ளீடு இல்லாததை உள்ளது போல் கூறுதல்.
புளுகு – பொய்யை ஒட்டிப் புனைந்து கூறுதல்.

சொல் பொருள் விளக்கம்

பொய் கூறுவதும் அதனைப் பொருத்திக் காட்டுவதற்குப் புளுகுவதும் வழக்கம்.

“ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடங்கி, அணைத்துப்
புளுகுடா அயலூர் கோடங்கி”

என்பது பொய் புளுகை வெளிப்படுத்தும். கோடாங்கி – குறிகூறுபவன். சில குறிப்புகளை மனத்தில் தாங்கி இவற்றை இப்படிக் கூறுவேன் எனக்கொண்டு கூறுபவன் ஆகலின் அவன் ‘கோள் தாங்கி’ (கோடாங்கி) எனப்பட்டான். ஓரிடத்துச் செய்தியை ஓரிடத்துக்கொண்டு கூறுதல் ‘கோள்’ எனப்படுவதை எண்ணுக.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

பார்க்க எடுத்துவிடல், கயிறு திரித்தல், பொய் புளுகு, கயிறு உருட்டல், கதைவிடல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *