Skip to content

சொல் பொருள்

(பெ) எளிமை

சொல் பொருள் விளக்கம்

எளிமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Easiness, as of acquisition, of access

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி – அகம் 288/8

கனிகள் முதிர்ந்த இந்தப் பக்கமலையில் நாங்கள் தனித்திருப்பதைக் காண்பதனால்
எங்களை எளிதாக அடைதற்குரியவர்கள் என்று நினைத்துவிட்டாய்

தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் – புறம் 43/18,19

தமக்குப் பிழைசெய்தவரைப் பொறுத்துப்போகும் தலைமைப்பண்பு
இந்தக் குடியில் பிறந்தவர்க்கு எளிதாக வருவதாகும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *