சொல் பொருள்
(பெ) தமியேம், தனிமையுடையோம்
சொல் பொருள் விளக்கம்
தமியேம், தனிமையுடையோம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
We who are in solitude
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாவல் பழு மரம் படரும் பையுள் மாலை எமியம் ஆக ஈங்கு துறந்தோர் தமியர் ஆக இனியர்-கொல்லோ – குறு 172/1-4 வௌவால் பழுத்த மரத்தைத் தேடித்திரியும் துன்பந்தரும் மாலையில் நாம் தமியேமாய் இருக்க இங்கு நம்மைவிட்டுச் சென்ற தலைவர் தாம் அங்கு தனியராய் இருப்பது அவருக்கு இனிமையானதோ? – எமியம் என்றது தோழியையும் நினைந்து – உ.வே.சா விளக்கம் யாமே எமியம் ஆக நீயே ஒழிய சூழ்ந்தனை ஆயின் – அகம் 33/12,13 (இப்போது இங்கே)நான் தனியனாய் இருக்க, (என் நெஞ்சே!) நீ மட்டும் (என்னை)விட்டுப் போக எண்ணுகிறாய் என்றால்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்