Skip to content

சொல் பொருள்

(பெ) தமியேம், தனிமையுடையோம்

சொல் பொருள் விளக்கம்

தமியேம், தனிமையுடையோம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

We who are in solitude

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாவல்
பழு மரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்கு துறந்தோர்
தமியர் ஆக இனியர்-கொல்லோ – குறு 172/1-4

வௌவால்
பழுத்த மரத்தைத் தேடித்திரியும் துன்பந்தரும் மாலையில்
நாம் தமியேமாய் இருக்க இங்கு நம்மைவிட்டுச் சென்ற தலைவர்
தாம் அங்கு தனியராய் இருப்பது அவருக்கு இனிமையானதோ?
– எமியம் என்றது தோழியையும் நினைந்து – உ.வே.சா விளக்கம்

யாமே எமியம் ஆக நீயே
ஒழிய சூழ்ந்தனை ஆயின் – அகம் 33/12,13

(இப்போது இங்கே)நான் தனியனாய் இருக்க, (என் நெஞ்சே!) நீ மட்டும்
(என்னை)விட்டுப் போக எண்ணுகிறாய் என்றால்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *