சொல் பொருள்
(வி) தீயில் அழி, தீக்கு இரையாக்கு,
(பெ) நெருப்பு, தீச்சுவாலை, கார்த்திகை நட்சத்திரம், எரி மீன், எரிகல்,
சொல் பொருள் விளக்கம்
தீயில் அழி, தீக்கு இரையாக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
burn, set on fire, fire, burning flame, the constellation Pleiades, meteor
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும் இதழ் கவின் அழிந்த மாலையொடு – பதி 48/10,11 பகைவரின் ஊர்களைச் சுடுகின்ற மிகுதியான நெருப்பை எரிப்பதால், மிகவும் பூவிதழ்கள் தம் அழகழிந்துபோன மாலையோடு எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 159,160 நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை, சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி, எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 196 மேனோக்கி எரிகின்ற நெருப்பு (தீச்சுவாலை) சாய்ந்தாலொத்த நாவினையும் விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/1,2 விரிந்த ஒளிக்கதிர்களையுடைய திங்களுடன் அகன்ற வானத்தில் சேர்க்கப்படுவனவாகிய, எரி என்னும் கார்த்திகை, சடை என்னும் திருவாதிரை, அழகிய யானை என்னும் பரணி ஆகிய நாள்கள் முதலாக மிக வானுள் எரி தோன்றினும் – புறம் 395/34 வானகத்தே எரி மீன்கள் மிகுதியாகத் தோன்றிடினும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்