Skip to content
எறுழம்

எறுழம் என்பது செந்நிறப்பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை.

1. சொல் பொருள்

(பெ) செந்நிறப்பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை.

2. சொல் பொருள் விளக்கம்

செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை, யானை நெற்றியில் புள்ளிகள் இருப்பது போலப் பூக்கும். நரைத்த வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாகப் பூக்கும்.

எறுழம்
எறுழம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

A hill tree with red flowers;
Paper flower climber, calycopteris floribunda, Rhododendron Nilagircum, zenk, Woodfordia fruticosa?

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 66

நெருப்பை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரப்பூ

கால் எறுழ் ஒள் வீ தாஅய - ஐங் 308/3

ஒளி பொருந்திய எறுழமலர்
எறுழ்
எறுழ்
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ - நற் 302/5

தெறுழ் மலர் நரைத்த வெள்ளை நிறத்தில்  கொத்துக் கொத்தாகப் பூக்கிறது

களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப - புறம் 119/2

யானை நெற்றியில் புள்ளிகள் இருப்பது போலப் பூக்கும்
எறுழம்
எறுழம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *