சொல் பொருள்
(பெ) 1. ஞாயிறு, சூரியன், 2. பகற்பொழுது, 3. இரவு, 4. ஒளி, ஒளிர்வு, 5. திடம், வலிமை,
சொல் பொருள் விளக்கம்
1. ஞாயிறு, சூரியன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sun, daytime, night, lustre, splendour, Vehemence; strength
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முள் தாள் தாமரை துஞ்சி வைகறை கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 73 – 76 முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில் துயில்கொண்டு, விடியற்காலத்தே, தேன் நாறுகின்ற நெய்தல் பூவை ஊதி, ஞாயிறு வெளிப்பட கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில், அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 65,66 பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழியில் பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க, மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய எல்லை போகிய பொழுதின் எல் உற பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/7-10 மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற விசும்பில் மாறிமாறி ஞாயிறு விழித்து இமைப்பது போல தோன்றித்தோன்றி மறைய, பகற்பொழுது சென்ற மாலைப்பொழுதில் இரவு வந்துசேர, பனி பெய்யத்தொடங்கிய துன்பத்தைத் தரும் நடுயாமத்தில், வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/5 வளைந்து இறங்கும், மூங்கிலைப் போன்ற தோள்களைக் கொண்ட ஒளியுடைய வளையணிந்த மகளிர் எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/14 வலிய பெருங் காற்று அலைக்கும் இருள் மிக்க மாலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்