சொல் பொருள்
(வி) 1. நிற்கும் நிலைக்கு வருதல், 2. உயர், மேலெழும்பு, 2. (பெ) கணையமரம், கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம், 3. (பெ.அ) ஏழு என்ற எண்ணின் பெயரடை
சொல் பொருள் விளக்கம்
எழு – தடை மரம். அகத்தே நுழையுங் காலத்து மேலே எழுப்பப்படுதலால் எழு என்பது பெயராயிற்று. “சீப்புள்ளுறுத்துத் திண்ணெழுப் போக்கி” என்றார் உஞ்சைக் காண்டத்தும். “எழுவுஞ் சீப்பும் முழுவிறல் கணையமும்” என்றார் இளங்கோவடிகளாரும். (15: 215) (பெருங் இலாவண. 5. 38. பெருமழை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rise, rise up, Cross-bar of wood set to a door; adjectival form of the number seven
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழு எனின் அவளும் ஒல்லாள் – நற் 159/8 எழுந்து வருக என்று அழைத்தால் அவளும் அதற்கு உடன்படமாட்டாள்; வென்று எழு கொடியின் தோன்றும் – மலை 582 வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும் எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 49 கணையமரத்தைப் போன்ற திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவன் கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427 தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்