சொல் பொருள்
(பெ) 1. அந்நியர், அயலார், 2. சற்றும் தொடர்பற்றவர், 3. பகைவன்,
சொல் பொருள் விளக்கம்
அந்நியர், அயலார்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stranger, one who is not involved in the matter, enemy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13 ஊரிலுள்ள அயலார் கூறும் சொற்களை ஒரு பொருட்டாக மதித்தாயோ? ஏதிலார் தந்த பூ கொள்வாய் – கலி 111/14 யாரோ ஒருவர் கொடுத்த பூவைக் கையில் கொண்டிருக்கிறாய், ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/8 வேற்றுநாட்டவன் படைகள் கொஞ்சங்கொஞ்சமாய் ஆக்கிரமிப்பது போல் வந்து தங்கியது இளவேனில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்