சொல் பொருள்
(பெ) 1. தலைவன், 2. சான்றோன், 3. ஏந்திப்பிடித்தல்
உயரமான இடத்தையும், உயரமான இடத்தில் உள்ள ஏரியையும், ஏரி சார்ந்த ஊரையும் குறிப்பது முகவை, நெல்லை மாவட்ட வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கையில் எடுத்துத் தருதல், தூக்கித் தருதல் என்பவை ஏந்துதல் ஆகும். இது பொதுவழக்கு. உயரமான இடத்தையும், உயரமான இடத்தில் உள்ள ஏரியையும், ஏரி சார்ந்த ஊரையும் குறிப்பது முகவை, நெல்லை மாவட்ட வழக்கு. எ-டு: முத்தரசனேந்தல், முடிவைத்தானேந்தல், கொம்புக்காரனேந்தல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
leader, noble person, stretching out
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் – குறு 180/2 பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால் எழு கையாள எண் கை ஏந்தல் – பரி 3/38 ஏழு கைகளைக் கொண்டவனே! எட்டுக் கைகளைக் கொண்ட சான்றோனே! ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும் – அகம் 381/3 ஏந்தலாக இருக்கும் வெண்மையான கொம்பினைக் குடைந்து பறவைகள் தின்னும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்