Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பாதுகாவல், பாதுகாப்பு, 2. ஆறுதல், ஆற்றுவது,  3. இன்பம், களிப்பு, 

சொல் பொருள் விளக்கம்

ஏ>ஏம்>ஏமம் = பாதுகாப்பு, இன்பம். ஏ= உயர்ச்சி, ‘ஏ பெற்றாகும் என்பது தொல்காப்பியம். விலங்குகளாலும் பகைவராலும் வெள்ளத்தாலும் துன்பம் நேரும் போது உயர்ந்த இடம் பாதுகாப்பிற்கு ஏதுவானது. பாதுகாப்பால் இன்பம் உண்டாகும். ஏமம் > சேமம். ஒ. நோ: ஏண்> சேண். சேம அச்சு (புறம். 102)

(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 349.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

protection, guard, safety, consolation, solace, pleasure, delight

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எல்_இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 66

பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க,

நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11

நோய்மிக்க என் நெஞ்சினை ஆற்றுவதாய் இருக்கிறது ஓரளவுக்கு

எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட_மகள் – ஐங் 393/3,4

உன் இன்னலுற்ற நெஞ்சத்திற்கு இன்பம் உண்டாகும்படி
வருகிறாளோ உன் இளைய மகள்?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “ஏமம்”

  1. வாழ்க!தமிழை வளம் நிறைந்த மொழியாக உலகிற்கு எடுத்து காட்டும் உங்கள் சீரிய பணி செவ்வனே சிறக்கட்டும்!வாழ்க தமிழ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *