சொல் பொருள்
(வி) 1. தடுமாறு, மனங்கலங்கு, 2. பாதுகாவலடை, 3. இன்பமடை,
சொல் பொருள் விளக்கம்
தடுமாறு, மனங்கலங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be confused, be perplexed, be protected, rejoice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் – நற் 49/5,6 சுறாமீன்களைப் பிடித்த மகிழ்ச்சியையுடையவராய், தம் வேட்டையை விடுத்து எமது இல்லத்தோரும் மனையில் தங்கினர்; யாம் மனம் கலங்கினோம் ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப கடைகோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/4,5 அசையும் தலையினையுடைய செம்மறியாட்டின் தொகுதி பாதுகாவல் அடைய கடையும்கோலிலிருந்துஎழுந்த சிறி தீயை வளர்ந்திட விறகினால் சேர்த்து கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப புலி பகை வென்ற புண் கூர் யானை – அகம் 202/2,3 மெல்லிய தலையினையுடைய இளைய பெண்யானை தன் இனத்துடன் இன்பமடைய புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண்யானை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்