Skip to content

சொல் பொருள்

(வி) 1. தடுமாறு, மனங்கலங்கு, 2. பாதுகாவலடை, 3. இன்பமடை, 

சொல் பொருள் விளக்கம்

தடுமாறு, மனங்கலங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be confused, be perplexed, be protected, rejoice

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் – நற் 49/5,6

சுறாமீன்களைப் பிடித்த மகிழ்ச்சியையுடையவராய், தம் வேட்டையை விடுத்து
எமது இல்லத்தோரும் மனையில் தங்கினர்; யாம் மனம் கலங்கினோம்

ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடைகோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/4,5

அசையும் தலையினையுடைய செம்மறியாட்டின் தொகுதி பாதுகாவல் அடைய
கடையும்கோலிலிருந்துஎழுந்த சிறி தீயை வளர்ந்திட விறகினால் சேர்த்து

கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை – அகம் 202/2,3

மெல்லிய தலையினையுடைய இளைய பெண்யானை தன் இனத்துடன் இன்பமடைய
புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண்யானை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *