சொல் பொருள்
(வி) 1. இன்பமடை, மகிழ்ச்சியடை, 2. மயக்கமுறு, 3. காக்கப்படு, 4. வெறிபிடி, பித்துப்பிடி, 5. வருத்தப்படு, 6. அலைக்கழிக்கப்படு,
சொல் பொருள் விளக்கம்
இன்பமடை, மகிழ்ச்சியடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be glad, delighted, be perplexed, be protected, be mad, be in sorrow, be harassed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே – அகம் 393/26 (உன்) இன்பம்வாய்ந்த கூட்டமாகிய இனிய துயிலினை மறந்து எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் – நற் 273/2 துன்பம் மிக்க மயக்கம்தருகின்ற துயரத்தை ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/39 காவல்பொருந்திய நாவாயின் வரவை எதிர்கொள்ளும் வணிகர் போல, எறி உளி பொருத ஏமுறு பெரு மீன் – அகம் 210/2 எறியப்பட்ட உளி தாக்கியதால் வெறிபிடித்த பெரிய மீன் கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி – நற் 30/6 கவலையினால் வருத்தப்பட்டதால் வெப்பமாக விழும் அரித்தோடும் கண்ணீருடன், கால் ஏமுற்ற பைதரு காலை – நற் 30/7 காற்றால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புற்ற பொழுதில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்