சொல் பொருள்
ஏர் – ஏர்த் தொழில்
கலப்பை – ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை.
சொல் பொருள் விளக்கம்
வேளாண் தொழிலில் பலப்பல வேலைப் பிரிவுகள் இருப்பினும் உழவுத் தொழில் எனவும், உழவர் எனவும் பெயர் வழங்கும் வழக்கம், உழவை விளக்கும். திருவள்ளுவர் கூறியது ‘உழவு’ என்பதே.
மேல்மண் கீழ்மண் கலக்க வைக்கும் கருவி கலப்பையாம். கலப்பைக்கும் ஏர் எனப் பெயர் உண்டு. ‘ஏர்க்கால்’ என்பது குத்தியில் நுழைக்கப் பெற்று நீண்டு நுகக் கோலுக்குச் செல்லும் தடியாம். ஏர் என்பது உழுதல் தொழிலில் வருவதை “ஏரினும் நன்றா எருவிடுதல்” என்னும் குறள் தெளிவிக்கும். (குறள் 1038)
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்