சொல் பொருள்
(பெ) குறிஞ்சி நிலத் தலைவன்,
சொல் பொருள் விளக்கம்
குறிஞ்சிநிலத் தலைவன்,
இவன் குறிஞ்சி நிலத்துக் குறவர்க்குத் தலைவன். வெல்லும் வேலும் வல்லவன். தனக்குரியோர் பிழைசெய்யின் அதனைப் பொறுத்தலும், பிறர்க்குண்டான வறுமை கண்டு நாணுதலும், படையாளுமிடத்துப் பழிபடாமையும், வேந்தர் அவைக்களத்துப் பெருமிதமுற்று விளங்குதலும், இவனது சீரிய பண்புகளாம். இவன் ஏறைக்கோன் எனப்படுவான். இவனைக் குறமகள் இளவெயினி என்பார் ஒரு புறப்பாட்டால்சிறப்பிக்கின்றார்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chief of the hilly tract
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே – புறம் 157/13 பெரிய மலைநாடனாகிய எம்முடைய ஏறைக்கோனுக்குப் பொருந்தும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்