Skip to content
ஐவனம்

ஐவனம் என்பது ஒரு வகை நெல்

1. சொல் பொருள்

(பெ) மலை நெல்,

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு வகை வெள்ளிய மலை நெல்

ஐவனம்
ஐவனம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

mountain paddy

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஐவனம்
ஐவனம்
நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 286-288

நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த குறிய கதிர்களைக் கொண்ட தோரைநெல்லும், நெடிய தண்டையுடைய வெண்சிறுகடுகும், ஐவனம் என்னும் வெள்ளிய நெல்லொடு பிணக்கம் கொண்டு வளர்ந்து,

வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் - மலை 115

அருவி பரப்பின் ஐவனம் வித்தி - குறு 100/1

மை படு சிலம்பின் ஐவனம் வித்தி - குறு 371/2

ஐவனம் கவரும் குன்ற நாடன் - ஐங் 267/3

ஐவனம் வித்தி மை உற கவினி - புறம் 159/17

ஐவனம் காவல் பெய் தீ நந்தின் - புறம் 172/6

ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி - மது 288

ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு - நற் 373/4

ஐவன சிறு கிளி கடியும் நாட - ஐங் 285/3

ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் - கலி 43/4

பெரும் கை இரும் களிறு ஐவனம் மாந்தி - ஐந்70:12/1

அவட்குஆயின் ஐவனம் காவல் அமைந்தது - திணை150:8/1

ஒத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து என் - திணை150:19/2

அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும் - சிந்தா:7 1561/3

யானை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த - சிந்தா:7 1562/1

வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ - பால:16 4/4

அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் - தேவா-சுந்:623/1

கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி - தேவா-சுந்:752/1

அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே - திருக்கோ:144/2

ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புல்-பால் சொன்றி - 3.இலை:3 34/1

அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் - 3.இலை:3 3/4
ஐவனம்
ஐவனம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *