Skip to content
ஒட்டகம்

ஒட்டகம் பாலைவனங்களில் வாழும் ஒரு விலங்கு ஆகும்

1. சொல் பொருள்

(பெ) பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும்.

2. சொல் பொருள் விளக்கம்

தொல்காப்பியர் காலத்திலேயே ஒட்டகம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஒட்டக மவற்றோ டொருவழி நிலையும் – மரபியல் , 18.

ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை
பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய –மரபியல் , 58 .

ஒட்டகத்திற்கு மரபுப் பெயர்கள் வழங்குமளவு பழகிப் போய் விட்டதாகத் தெரிகின்றது . சங்க இலக்கியத்தில் இரு பாடல்களில் ஒட்டகம் சொல்லப்பட்டுள்ளது.

ஒட்டகம்
ஒட்டகம்

குறும்பொறை யுணங்குந் தகர் வெள் ளென்பு
கடுங்கால் ஒட்டகத் தல்குபசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி – அகம் , 245 .

ஓங்கு நிலை யொட்டகந் துயின் மடிந் தன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரைமர விறைகிற் – சிறுபாணாற்றுப்படை , வரிகள் 154-155

ஒட்டகத்தைப் பாலைப்பாங்கான நிலத்தைக் கடப்பதற்குப் பயன்படுத்தியதை அகநானூறு 245 ஆம் பாடல் கூறுகின்றது . பாறைகளில் வறண்டிருந்த எலும்பை ஒட்டகம் தின்றதாகக் கூறியிருப்பது செவி வழிச் செய்தியாகத் தோன்றுகின்றது . ஒட்டகம் எலும்பைத் தின்பது உண்மையன்று . ஒட்டகம் தூங்கும் போது அதன் முதுகு நெளிந்திருப்பது அகில் மரங்கள் குவித்து வைத்தது போல இருந்ததாகக் கூறியது ஓட்ட கத்தின் உருவத்தைக் குறிப்பாக உணர்த்துகின்றது . ஒட்டகம் இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து வந்ததனத் தெரிகின்றது . ஆனால் தமிழ்நாட்டில் கி. பி . முதல் நூற்றாண்டிற்கு முன்னரே பயன்படுத்தி இருக்க வேண்டும் . ஒட்டகம் என்ற பெயர் வடமொழியிலிருந்து தமிழில் வழங்கியதென்று தெரிகின்றது .

பாலைவனத்தில் வாழும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒட்டகங்களே ஆதாரமானதால் இவைகளை ‘பாலைவனத்துக் கப்பல்’ என்றே அழைப்பர்.

ஒட்டகம்
ஒட்டகம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Camel

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – அகம் 245/18

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154

ஒட்டகம்
ஒட்டகம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *