சொல் பொருள்
(வி) துற, கைவிடு, நீங்கு
சொல் பொருள் விளக்கம்
துற, கைவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
abandon, renounce, leave, part
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும் நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/22-25 படைவலிமை இல்லாத ஓர் அரசன் ஆளும்போது, அவனுக்கு எதிராக வந்த கடுமையான பகைவர்கள், அந்தப் பகைவரை விரைந்து போக்கி, நீங்காமல் நின்று காத்து நடத்தும் நல்ல திறமை மிக்க அரசன் தோன்றும்போது ஓடிவிடுவதைப் போன்று இல்லாமல் போய்விட்டது இருளிடையே மறைந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்