Skip to content

சொல் பொருள்

(வி) ஒருவு என்பதன் விகாரம்

ஒருவுதல் – நீங்குதல் – பார்க்க ஒரீஇ

சொல் பொருள் விளக்கம்

ஒருவு என்பதன் விகாரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் – கலி 87/1

“அகன்று போ! நீ எனது கூந்தலைத் தொடவேண்டாம்!

போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே – பதி 33/12

ஒரிலுன்ன எதிர்கொண்ட வேந்தர் ஓடிப்போவர் உன்னை விட்டு

பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல – அகம் 71/2,3

ஒரு பயனும் இல்லாமற்போனதால் பற்றினை ஒழித்து நீங்கிப்போகும்
பண்பு அற்ற மக்களைப்போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *