சொல் பொருள்
காய்ந்து உலர்ந்த மிளகாய் வற்றலை ஓசைவற்றல் என்பது எறையூர் (இறையூர்) வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
காய்ந்து உலர்ந்த மிளகாய் வற்றலை ஓசைவற்றல் என்பது எறையூர் (இறையூர்) வட்டார வழக்கு. காய்ந்த வற்றில் விதை ஒட்டாமல் ஒலிப்பதைக் கேட்கலாம். குரங்கு தன் குட்டியின் அழுகையை நிறுத்த வாகை நெற்றை அசைத்துக் கிலுகிலுப்பைபோல் ஒலித்துக் காட்டி அழுகையை அமர்த்துதலைச் சங்கச் சான்றோர் பாட்டில் காணலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்