கடு என்பது ஒருவகை மரமாகும்
1. சொல் பொருள்
1. (வி) 1. விரைந்து ஓடு, 2. ஒத்திரு, 3. ஐயப்படு.
2. (பெ.அ) கடுமையான, விரைவான.
3. (பெ) 1. கடுக்காய் மரம், 2. நஞ்சு.
2. சொல் பொருள் விளக்கம்
விரைந்து ஓடு,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
run fast, resemble, doubt, intense, fast, Chebulic myrobalan, Terminalia chebula, poison, venom

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம் - குறள் 57:7
காலெனக் கடுக்கும் கவின் பெரு தேரும் – மது 388 காற்றுப்போல் விரையும் அழகிய தேரும், சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற் 228/6 முதுகை ஒத்திருக்கும் பெரும் துதிக்கையைக் கொண்ட வேழம் நெஞ்சு நடுக்குற கேட்டும் கடுத்தும் தாம் அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/1,2 மனம் நடுங்குமாறு ஒரு செய்தியைக் கேட்டும், அதைப் பற்றி ஐயப்பட்டும், தாம் அஞ்சிக்கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி உண்மையாகி நம்மைக் கொடுமைப்படுத்தும் என்று கூறும் பழமொழி, கல் காயும் கடு வேனிலொடு – மது 106 பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால் கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555 வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின் கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – மலை 14 கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில் கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148 நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும், படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை - திரு 80 கல் காயும் கடு வேனிலொடு - மது 106 கவை அடி கடு நோக்கத்து - மது 162 விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் - குறி 3 உடு உறும் பகழி வாங்கி கடு விசை - குறி 170 கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் - மலை 14 முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் - மலை 380 கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று - மலை 555 கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று - நற் 7/3 கடு மான் புல்லிய காடு இறந்தோரே - நற் 14/11 கடு மா பூண்ட நெடும் தேர் - நற் 91/11 கடு நடை யானை கன்றொடு வருந்த - நற் 105/4 இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் - நற் 126/3 கடு மான் பரிய கதழ் பரி கடைஇ - நற் 149/7 கடு மா வழங்குதல் அறிந்தும் - நற் 257/9 கடு முரண் எறி சுறா வழங்கும் - நற் 303/11 கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு - நற் 354/8 கயிறு கடை யாத்த கடு நடை எறி_உளி - நற் 388/3 சென்றிசின் வாழியோ பனி கடு நாளே - நற் 394/6 கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் - குறு 107/5 கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ - குறு 158/2 கவை முட கள்ளி காய் விடு கடு நொடி - குறு 174/2 கடு மா கடவு-மதி பாக நெடு நீர் - குறு 250/4 சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி - குறு 272/5 கடு மா நெடும் தேர் நேமி போகிய - குறு 336/4 கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை - குறு 372/2 முன்னர் தோன்றும் பனி கடு நாளே - குறு 380/7 கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி - ஐங் 78/1 கடு வரல் அருவி காணினும் அழுமே - ஐங் 251/4 கடு மா தாக்கின் அறியேன் யானே - ஐங் 296/4 கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும் - ஐங் 335/3 கடு மான் திண் தேர் கடைஇ - ஐங் 360/4 ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி - பதி 25/8 காடு உறு கடு நெறி ஆக மன்னிய - பதி 26/11 கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப - பதி 28/4 களிறு பரந்து இயல கடு மா தாங்க - பதி 49/4 ஓடு-உறு கடு முரண் துமிய சென்று - பதி 78/11 களிறு பாய்ந்து இயல கடு மா தாங்க - பதி 81/6 மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை - பரி 1/24 கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் - பரி 4/49 கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும் - பரி 12/28 கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும் - பரி 20/105 கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி - கலி 12/3 கடு விசை கவணையில் கல் கை விடுதலின் - கலி 41/10 கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும் - கலி 50/19 கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் - கலி 116/6 கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை - கலி 120/9 வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை - கலி 137/10 சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று - அகம் 1/17 புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை - அகம் 3/9 பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று - அகம் 18/2 கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி - அகம் 47/5 நெடு நீர் இரும் கழி கடுமீன் கலிப்பினும் - அகம் 50/2 கடு நீர் வரித்த செம் நில மருங்கின் - அகம் 64/8 விலங்கு வெம் கடு வளி எடுப்ப - அகம் 71/17 புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை - அகம் 97/3 கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து - அகம் 121/13 கடு மான் தேர் ஒலி கேட்பின் - அகம் 134/13 கடு நவை படீஇயர் மாதோ களி மயில் - அகம் 145/14 பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர் - அகம் 181/11 கிளை பாராட்டும் கடு நடை வய களிறு - அகம் 218/1 காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு - அகம் 223/6 கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை - அகம் 224/4 ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக - அகம் 264/8 கடு விசை கவணின் எறிந்த சிறு கல் - அகம் 292/11 கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை - அகம் 299/5 கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர் - அகம் 319/4 கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் - அகம் 340/20 மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய - அகம் 346/10 கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு - அகம் 353/10 கடு நடை புரவி வழிவாய் ஓட - அகம் 354/7 கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப - அகம் 363/7 கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் - அகம் 372/10 வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென - அகம் 392/15 கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப - புறம் 17/38 கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி - புறம் 37/10 கொடு மர மறவர் பெரும கடு மான் - புறம் 43/11 களம் கொள் யானை கடு மான் பொறைய - புறம் 53/5 கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த - புறம் 54/8 கடு வளி தொகுப்ப ஈண்டிய - புறம் 55/22 கைவள் ஈகை கடு மான் பேக - புறம் 143/6 கடு மான் தோன்றல் செல்வல் யானே - புறம் 162/7 கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி - புறம் 167/10 கைவள் ஈகை கடு மான் கொற்ற - புறம் 168/17 கடுமா பார்க்கும் கல்லா ஒருவற்கும் - புறம் 189/4 கடு மான் மாற மறவாதீமே - புறம் 198/27 மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய் - புறம் 205/8 கடு மான் தோன்றல் நெடுமான்அஞ்சி - புறம் 206/6 கல் ஆயினையே கடு மான் தோன்றல் - புறம் 265/5 கடு மான் வேந்தர் காலை வந்து எம் - புறம் 350/5 கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி - புறம் 355/5 கடு மா கடைஇய விடு பரி வடிம்பின் - புறம் 378/4 விடு-மதி அத்தை கடு மான் தோன்றல் - புறம் 382/16 கடு வினையர் ஆகியார் சார்ந்து - நாலடி:13 4/4 கடு விசை நாவாய் கரை அலைக்கும் சேர்ப்ப - நாலடி:23 4/2 காணம் இல்லாதார் கடு அனையர் காணவே - நாலடி:38 4/2 அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா - இன்னா40:6/1 கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி - கார்40:10/3 கடு விசை வால் அருவி நீந்தி நடு இருள் - ஐந்50:19/2 கடு உணங்கு பாறை கடவு தெவுட்டும் - ஐந்70:39/2 கடு மான் மணி அரவம் என்று கொடுங்குழை - ஐந்70:59/2 கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் - குறள்:57 7/1 காடு உறை வாழ்க்கை கடு வினை மாக்களை - பழ:121/1

சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடு முள் - தேம்பா:5 15/3 கடு கொண்ட கண்ணின் கவினார் கனிவு ஆய ஆசை - தேம்பா:5 82/1 கடு கொடு இங்கு கடுத்தன தீது அற - தேம்பா:7 47/1 கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா கடு மரமோடு ஆணியும் முள்_முடியும் தூணும் - தேம்பா:8 60/2 கான் பொழிந்த கனி கடு பாய்ந்த பின் - தேம்பா:9 42/3 கடல் வண்ணத்து எ குணமும் உளனாய் முன் நாள் கடு நீதி - தேம்பா:14 92/2 கடி கோடி கோடி குடியாய் உலாவு கடு நாடு மூடி மிடைய - தேம்பா:14 131/4 கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான் - தேம்பா:16 41/1 கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான் - தேம்பா:16 41/2 கடு மலை இழைத்த சாபம் இறுவது கடிதில் அவன் நக்கு நீடு குமுறவே - தேம்பா:24 34/4 கடு ஒக்கும் பிணி போல் அது காப்பார் - தேம்பா:25 26/3 தப்பு உற உரைத்த மாற்றம் தந்தன கடு நோய் தீர்க்கும் - தேம்பா:25 57/1 கடு உயிர்த்து அடும் கண் செவி நாகமே - தேம்பா:26 180/1 கடிது மாய்ந்து ஒழிதர கடு உண்பு ஆவது ஏன் - தேம்பா:28 44/4 கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையை காக்க - தேம்பா:35 24/1 கழல் கண் கூளி கடு நவை பட்டோர் - புகார்:5/125 கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி - புகார்:6/7 கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் - புகார்:7/62 காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை - புகார்:10/108 கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் - மது:19/47 கடு வினையேன் செய்வதூஉம் காண் - மது:20/97 கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் - வஞ்சி:24/6 கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள் - வஞ்சி:25/83 கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த - வஞ்சி:29/69 கங்குல் கழியினும் கடு நவை எய்தாது - மணி:6/25 கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி - மணி:6/127 காமன் கையற கடு நவை அறுக்கும் - மணி:7/36 கண்டனை ஆக என கடு நகை எய்தி - மணி:16/91 காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை - மணி:17/54 கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ - மணி:20/128 கான வேட்டுவன் கடு கணை துரப்ப - மணி:23/114 கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று - மணி:27/69 கடு நடை கவரி நெற்றி கால் இயல் புரவி காய்ந்து - சிந்தா:3 701/2 கடு வெம் குறவன் எயப்பட்ட கன்னி பிணையின் நிலை கலங்கி - சிந்தா:7 1659/2 கடு நடை புரவி போரும் கரப்பற கற்று முற்றி - சிந்தா:7 1678/2 கடு மத களிப்பினால் கார் என முழங்கலின் - சிந்தா:7 1831/1 காம கடு நோய் கனல் சூழ்ந்து உடம்பு என்னும் மற்று இ - சிந்தா:8 1966/1 கடு நடை கற்றாய் கணவன் இழப்பாய் - சிந்தா:10 2125/2 காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார் - சிந்தா:10 2165/1 கலங்கு தெண் திரையும் காரும் கடு வளி முழக்கும் ஒப்ப - சிந்தா:10 2205/2 கண் வலை பட்ட-போழ்தே கடு நவை அரவோடு ஒக்கும் - சிந்தா:13 2611/2 கடு வளி புடைக்கப்பட்ட கண மழை குழாத்தின் நாமும் - சிந்தா:13 2618/1 நீள் நீர் முத்தம் நிரை முறுவல் கடு சுட்டு உரிஞ்ச கதிர் உமிழ்ந்து - சிந்தா:13 2697/3 கடு மணி கயல் கண் நல்லார் காமமும் பொருளும் சிந்தித்து - சிந்தா:13 2878/3 கண் நாறி நோக்கி கடு நகை செய்வான் - வளையா:71/4

கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி - முத்தொள்:22/1 களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி - முத்தொள்:40/3 கலாபேதத்த கடு விடம் எய்தி - திருவா:4/57 தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல - திருவா:6 32/3 கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க - திருவா:32 2/3 கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் - தேவா-சம்:155/3 கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை - தேவா-சம்:647/2 கடு கொள் சீவரை அடக்கினான் ஆரூர் - தேவா-சம்:990/1 கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் - தேவா-சம்:1385/2 காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் - தேவா-சம்:1462/2 தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1463/4 காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே - தேவா-சம்:1857/4 கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே - தேவா-சம்:1866/4 பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம் - தேவா-சம்:2570/1 கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர் - தேவா-சம்:2930/1 கடு உடை வாயினர் கஞ்சி வாயினர் - தேவா-சம்:2996/1 கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே - தேவா-சம்:3246/4 கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த - தேவா-சம்:3456/1 கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் - தேவா-சம்:3701/2 கடு மலி உடல் உடை அமணரும் கஞ்சி உண் சாக்கியரும் - தேவா-சம்:3765/1 கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் - தேவா-சம்:3800/1 காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் - தேவா-சம்:3910/1 கடலிடை வெம் கடு நஞ்சம் உண்ட கடவுள் விடை ஏறி - தேவா-சம்:3945/1 காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே - தேவா-சம்:4051/2 கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் - தேவா-அப்:383/2 கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை - தேவா-அப்:724/2 கடு_கண்டன் கயிலாய மலை-தனை - தேவா-அப்:1183/1 கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே - தேவா-அப்:1698/2 கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி - தேவா-அப்:2140/3 கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை - தேவா-அப்:2195/1 கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே - தேவா-அப்:2460/2 காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக - தேவா-அப்:2523/3 கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் - தேவா-அப்:2582/3 கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் - தேவா-அப்:2667/3 கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் - தேவா-அப்:2803/1 இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் - தேவா-அப்:2812/2 ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் - தேவா-அப்:2830/2 பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை - தேவா-அப்:2878/1 கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும் - தேவா-அப்:2904/1 காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் - தேவா-சுந்:291/3 கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் - தேவா-சுந்:294/2 கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் - தேவா-சுந்:511/3 கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன் - தேவா-சுந்:846/1 கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் - தேவா-சுந்:1033/1 முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் - திருக்கோ:236/1 காங்கு அரு மேட்டில் கடு பூசி விந்து விட்டு - திருமந்:999/3 காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி - திருமந்:2893/1 இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு - 3.இலை:1 6/3 கடு விசை முடுகி போகி களிற்றொடும் பாகர் வீழ்ந்த - 3.இலை:1 34/1 கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி - 3.இலை:3 26/1 மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் - 3.இலை:3 87/4 இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி - 5.திருநின்ற:1 185/3 காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய் - 5.திருநின்ற:1 287/2 மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி - 6.வம்பறா:1 783/2 கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல் - நாலாயி:267/1 கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும் - நாலாயி:391/3 காம்பு உடை குன்றம் ஏந்தி கடு மழை காத்த எந்தை - நாலாயி:1288/2 கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் - நாலாயி:1340/1 கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் - நாலாயி:1384/1 சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன் - நாலாயி:1414/1 கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய் - நாலாயி:3801/2 கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடு வினை களையலாமே - நாலாயி:3908/4 கடு வினை களையலாகும் காமனை பயந்த காளை - நாலாயி:3909/1 காட்டி தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த - நாலாயி:3956/1 பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் - திருப்:16/3 வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன் - திருப்:103/1 இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான - திருப்:128/5 குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் - திருப்:145/3 கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா - திருப்:379/6 எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும் - திருப்:529/7 கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா - திருப்:722/2 அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் - திருப்:836/1 கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள் - திருப்:875/7 காண வருந்தி முடித்திட கடு விரகாலே - திருப்:918/2 சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ - திருப்:963/4 கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா - திருப்:963/7 கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் - திருப்:1050/7 கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி காலன் - திருப்:1088/2 கலை காட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி வெய்ய அதி பார - திருப்:1230/2 கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் - திருப்:1233/1 கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ - திருப்:1239/4 காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் - சீறா:54/2 கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ - சீறா:90/3 கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ - சீறா:237/3 கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் - சீறா:283/3 பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே - சீறா:614/4 கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் - சீறா:986/3 கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த - சீறா:1063/3 வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின் - சீறா:1101/4 கடு விட பண தலை நெளிய கண் அகன் - சீறா:1143/1 கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த - சீறா:1154/1 சொற்றதில் கடு வெகுளியுற்று இரு விழி சுழல - சீறா:1512/2 கடு விசை கொளும் கால் தளர்ந்து இதழினை கறிப்பார் - சீறா:1534/4 கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் - சீறா:1583/3 கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண் - சீறா:1717/3 புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும் - சீறா:1889/2 கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி - சீறா:1916/2 காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் - சீறா:2521/1 தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் - சீறா:2656/1 கடு விசை பரியினும் கடிய வேகமாய் - சீறா:2746/1 அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும் - சீறா:2789/1 கடு விசை பரி குழாம் கலந்து முன் செல - சீறா:3014/2 விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார் - சீறா:3030/4 கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை - சீறா:3379/3 கடு நடை புரவி வெள்ளத்து ஒட்டகம் கலித்து பொங்க - சீறா:3420/1 நாயகர் செவியில் புகுதலும் தலைமை நண்பரும் கடு விசை பரியும் - சீறா:3609/1 கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப - சீறா:3882/1 வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான் - சீறா:4067/4 கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை - சீறா:4131/2 வெம் கடு மனத்தன் வாய்மை இனையன விரிக்கலுற்றான் - சீறா:4361/4 கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த - சீறா:4913/2 வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் - வில்லி:4 61/3 முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி - வில்லி:11 70/1 வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் - வில்லி:12 160/4 கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான் - வில்லி:22 124/3 வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன - வில்லி:27 6/1 காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு - வில்லி:40 69/1 ஆடுகின்ற சிறை வெம் பருந்தின் நிழல் அஞ்சி அ கடு வனத்தை விட்டு - கலிங்:80/1 விம்மு கடு விசை வனத்தின் வெம்மையினை குறித்து அன்றோ விண்ணோர் விண்ணின் - கலிங்:87/1 கடல் கலக்கல்-கொல் மலை இடித்தல்-கொல் கடு விட பொறி பண பணி - கலிங்:343/1 சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் - உஞ்ஞை:33/202 கண்டவர் நடுங்க கடு வளி தோன்றலின் - உஞ்ஞை:43/103 கண் நெகிழ் கடு நோய் கைவரு காலை - உஞ்ஞை:45/44 காரொடு உறந்த இ கடு வளி நிமித்தம் - உஞ்ஞை:47/12 கார் முகத்து எழுந்தது கடு வளி வளி என - உஞ்ஞை:47/69 கடு படு கனியும் காழ் திப்பிலியும் - உஞ்ஞை:51/28 கற்படை அமைத்து கடு மழை மறப்பினும் - உஞ்ஞை:53/75 காட்டகத்து உறையும் கடு வினை வாழ்க்கை - உஞ்ஞை:53/107 கடு விசை கனலி சுடு கதிர் மருங்கில் - உஞ்ஞை:55/19 காரிகை கடு நுனை தூண்டில் ஆக - இலாவாண:7/73 கடு வளி வரவின் ஒடியா கற்பின் - இலாவாண:8/72 ஊன் சேர் கடு வேல் உதயணன் நீங்கிய - இலாவாண:8/116 கடு வினை கழூஉம் கங்கா தீரத்து - இலாவாண:9/259 கணை கடு நீத்து இடை புணை புறம் தழீஇ - இலாவாண:10/141 கடு நடை புரவி கைம்முதல் கொடுப்ப - இலாவாண:18/29 கரி புல் பதுக்கையும் கடு நுனை பரலும் - இலாவாண:19/190 படு திரை பௌவத்து கடு வளி கலக்க - இலாவாண:20/3 கடு முரண் அழித்த காய் சின நெடு வேல் - இலாவாண:20/120 கஞ்சிகை கதுமென கடு வளி எடுப்ப - மகத:6/6 கஞ்சிகை கடு வளி எடுப்ப மஞ்சிடை - மகத:7/48 காரிகை மத்தின் என் கடு வலி கடையும் - மகத:10/22 கடு வெயில் வந்த காவலாளர் கண் - மகத:10/57 கரு முகில் கிழிக்கும் கடு வளி போல - மகத:17/51 கடு வளி உற்ற கடலின் உராஅய் - மகத:17/251 கார் முக கடு முகில் ஊர்தியாக - மகத:20/55 கடம் தலைகழித்து கடு வாய் எஃகமொடு - மகத:20/124 ஆறாயிரவர் அடு கடு மறவரும் - மகத:26/68 சூறை கடு வளி பாற பறந்து என - மகத:27/74 கால் இயல் இவுளி கடு வளி ஆட்ட - மகத:27/119 அடவியுள் வீழ்ந்த கடு நடை இரும் பிடி - வத்தவ:3/10 விளைதரு கடு உடை விரிகொள் பாயலும் - பால:5 20/2 களன் அமர் கடு என கருகி வான் முகில் - பால:5 43/2 காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் - பால:7 14/2 மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் - பால:17 19/4 மென் நோக்கினதே கடு வல் விடமே - பால:23 17/4 காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று - பால-மிகை:0 3/1 கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா - அயோ:13 53/4 கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் - ஆரண்:7 95/4 பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் - ஆரண்:8 16/2 விராவ_அரும் கடு வெள் எயிறு இற்ற பின் - ஆரண்:9 23/1 ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே - ஆரண்:10 135/4 கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் - ஆரண்:13 11/4 மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ - கிட்:16 5/2 ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய - சுந்:12 48/4 கேட்டி வெம் கடு எனா கிளர் உற்பாதமாய் - சுந்-மிகை:3 9/3 முதிரும் வெம் கத மொழிகொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப - யுத்1:3 79/2 கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் - யுத்1:3 114/4 இட்டார் கடு வல் விடம் எண்ணுடையான் - யுத்1:3 115/1 கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் - யுத்1:3 115/3 கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா - யுத்2:16 217/1 சுவண வண்ண வெம் சிறை உடை கடு விசை முடுகிய தொழிலானும் - யுத்2:16 339/2 எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் - யுத்2:18 164/2 வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு - யுத்2:18 241/3 தேர் ஏறு சின கடு வெம் தறுகண் - யுத்2-மிகை:18 6/3 கள்ள கடு நிருத குலம் கண்டப்பட கண்டே - யுத்2-மிகை:18 19/2 உள்ள கடு வேகத்தொடு தேவாந்தகன் உளத்தே - யுத்2-மிகை:18 19/3 வாயில் கனல் வெம் கடு வாளி_இனம் - யுத்3:27 39/1 கால் என கடு என கலிங்க கம்மியர் - யுத்3:27 52/1 சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த - யுத்3:27 94/4 சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல் - யுத்3:31 117/1 கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் - யுத்3:31 214/4 கடு வைத்து ஆர் களன் கை படு கார் முகம் - யுத்3-மிகை:31 43/1 கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த - யுத்4:37 41/3 பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் - யுத்4:37 101/4 உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று - நள:190/3 கடப்பார் எவரே கடு வினையை வீமன் - நள:232/1 படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை - திரு 80
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்