Skip to content
கண்பு

கண்பு என்பது இந்நாளில் சம்பங்கோரை என்று அழைக்கப்படுகிறது

1. சொல் பொருள்

(பெ) சம்பங்கோரை, சம்பு, சண்பு, கண்பு

2. சொல் பொருள் விளக்கம்

கண்பு, சண்பு, சம்பு (lesser bulrush, narrow leaf cattail அல்லது lesser reedmace) என்பது ஒரு சதுப்பு நில
அல்லது நீர்த் தாவரம் ஆகும். இது சண்பகங்கோரை, சம்பங்கோரை (elephant grass) என்றும் அழைக்கப்படும்.

கண்பு
கண்பு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Typha angustifolia, Typa angustata, Bory & Chaur., Typha elephantina?, Typha minima?

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சம்பங்கோரை
சம்பங்கோரை
கண்பு
கண்பு
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 172

யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர

கண்பு மலி பழனம் கமழ துழைஇ – மலை 454

சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,

பெரும்பானற்றுப்படையில் சிறுபிள்ளைகள் கண்பினது புல்லிய காயாகிய கதிரை முறித்து அக்காயில் தோன்றிய தாதை மார்பிலே அடித்துக்கொண்டு விளையாடுவர் என்று கூறுகின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

பொன்காண் கட்டளை கடுப்ப கண்பின்
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் - பெரும்- 220-221

காமரு பழன கண்பின் அன்ன - புறம் 334/1

கண்பு
கண்பு
சம்பங்கோரை
சம்பங்கோரை
கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை - தேவா-சம்:647/2

பகை கொண்டார் போல் சுமாஅய் கண்பின் பரூஉ காம்பு அனைய கணை கால் சூழ்ந்து - சிந்தா:13 2694/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *