சொல் பொருள்
(வி) முடிவுபெறு,
சொல் பொருள் விளக்கம்
முடிவுபெறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be finished, come to an end
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செல்வம் கடைகொள சாஅய் சான்றவர் – கலி 61/2 தம் செல்வம் எல்லாம் அழிந்துவிட்டமையால் வறுமையுற்ற பண்பு நிறைந்தவர்கள் செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின் தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ – கலி 7/18-20 பிரிந்து செல்வது என்ற தவறான செய்கைக்கான ஏற்பாடுகளின்போதே இவ்வாறு வருந்துபவள், நீ சென்றுவிட்டால் இவளுடைய நலம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடுமாதலால், போய்விட்ட இவளின் இனிய உயிரை மீட்டுத் தர இயலுமோ, – நலம்கடைகொளப்படும் – இவள் இறந்துபடுவாள் – நச். உரை, பெ.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்