Skip to content

கடைக்கூட்டு

சொல் பொருள்

(வி) 1. (ஒன்றைச்)செய்துமுடி, நிறைவேற்று, 

2. இறுதியை (இறப்பை) அடையச்செய்,

சொல் பொருள் விளக்கம்

(ஒன்றைச்)செய்துமுடி, நிறைவேற்று,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

carry out, execute a plan

cause death

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்க என விடுக்குவன் அல்லன் – பொரு 175-177

(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு,
(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
‘(நீயிர்)செல்வீராக’ என விடுவான் அல்லன்,
– செலவு கடைக்கூட்டுதல்

போதற்கு உறுதிகொள்ளல் – பொ.வே.சோ விளக்கம்

மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்
கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன் – கலி 31/6,7

மெய்யை நடுக்கும் பின்பனிக்காலப் பனியுடன், முன்பனிக்கால வாடையும் சேர்ந்து
நம்மைச் செயலிழக்கச் செய்து சாகும் நிலைக்குத் தள்ள, நெஞ்சத்தைக் கலக்கும் இளவேனில் இது
– கடைக்கூட்ட – இறப்பினைக் கொணர – நச்.உரை, பெ.விளக்கம்

காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13

காம நோய் இறந்துபாட்டைச் சேர்த்துகையினாலே, தான் வாழ்கின்ற நாளையே வெறுத்துவிட்டவளை
– நச். உரை, கடை – இறப்பு – பெ.விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *